Virara Dhoni is the best T20 cricket? Ganguly kettuttare of

பத்து ஆண்ட்டுகளில் டி20 போட்டியில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே எடுத்த எம்.எஸ்.தோனி சிறந்த டி20 கிரிக்கெட் வீரரா? என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புணே அணிக்காக விளையாடி வரும் தோனி, ஓட்டங்கள் குவிக்க முடியாமல் தொடர்ந்து திணறி வருகிறார்.

கங்குலி அளித்த பேட்டி:

“தோனி சிறந்த டி-20 கிரிக்கெட் வீரரா எனத் தெரியவில்லை. ஒரு நாள் போட்டியில் அவர் சாம்பியன் வீரர்தான். ஆனால், டி-20 கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், கடந்த 10 ஆண்டுகளில் அவர் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். டி20 போட்டியில் அவர் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிக்கு தோனியை பரிசீலிக்க வேண்டும். ஆனால் அதில் அவர் ஓட்டங்கள் குவிப்பது முக்கியம்” என்று பேசினார்.