Victorian Open Squash Champion wins Indian player Arinder Chanthu ...

விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் ஹரிந்தர் சாந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.

இதன் இறுதிச் சுற்றில் அரிந்தர் சாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் ரெக்ஸ் ஹெத்ரிக் மோதினர்.

விறுவிறுப்பான நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 12-15, 11-3, 11-4, 11-7 என்ற செட் கணக்கில் ரெக்ஸ் ஹெத்ரிக்கை வீழ்த்தினார் அரிந்தர் சாந்து.

இந்தத் தொடரில் அரையிறுதி வரை சாந்து ஒரு செட்டைக்கூட இழக்கவில்லை. ஆனால் இறுதி ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த சாந்து, அதன்பிறகு அபாரமாக ஆடி தொடர்ச்சியாக மூன்று செ"ட்களையும் கைப்பற்றி வெற்றிக் கண்டு அசத்தினார்.

கடந்த வாரம் தெற்கு ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சாந்து, இப்போது விக்டோரியா ஓபனில் சாம்பியனாகியிருக்கிறார்.

விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று அரிந்தர் சாந்து கூறினார்.