மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் முதலிடத்தில் இருந்த வாவ்ரிங்கா படுதோல்வி அடைந்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் போட்டியில் நேற்று நடைபெற்ற 4-ஆவது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6-4, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் இளம் வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் தோல்வி கண்டார்.

ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் அலெக்சாண்டர், அடுத்தச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை சந்திக்கிறார்.

போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தனது 4-ஆவது சுற்றில் 7-6 (5), 7-6 (4) என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகட்டை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

ஃபெடரர் அடுத்த சுற்றில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்திக்கிறார்.

போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-4, 7-6 (4) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் நிகோலஸ் மஹத்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

நடால் அடுத்ததாக அமெரிக்காவின் ஜேக் சாக்கை சந்திக்கிறார்.