Unfortunately lost josna
லண்டனில் பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா இரண்டாவது சுற்றில் யாரும் எதிர்பார்த்திராத அளவில் தோல்வி அடைந்தார்.
ஜோஷ்னா தனது முதல் சுற்றில் உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ரேச்சல் கிரின்ஹம்மை எதிர்கொண்டு, 11-6, 8-11, 11-6, 12-10 என்ற செட் கணக்கில் வென்று 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
தனது இரண்டாவது சுற்றில் ஜோஸ்னா, எகிப்து நாட்டைச் சேர்ந்த உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ரனீம் எல் வெலிலியை எதிர்கொண்டார். இதில், 8-11, 7-11, 7-11 என்ற செட் கணக்கில் ஜோஷ்னா தோல்வி அடைந்தார்.
தற்போது ஜோஷ்னா போட்டியில் இருந்து வெளியேறியதை அடுத்து, பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
