u-19 World Cup Pakistan defeated South Africa
பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்.
பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தனது காலிறுதி ஆட்டத்தில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்து ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் 47.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக் கண்டது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் ஃபீல்ட் செய்ய தீர்மானித்தது. பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் வன்டிலே மக்வெது அதிகபட்சமாக 60 ஓட்டங்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் முகமது மூசா 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் அலி ஜர்யாப் ஆசிஃப் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
தென் ஆப்பிரிக்காவின் ஜேசன் நீமன்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அலி ஜர்யாப் ஆசிஃப் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
