Asianet News TamilAsianet News Tamil

யு-17 உலகக் கோப்பை: பிரேசில், கானா அணிகள் காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்…

U-17 World Cup Brazil and Ghana teams progress to quarter-finals
U-17 World Cup Brazil and Ghana teams progress to quarter-finals
Author
First Published Oct 20, 2017, 9:18 AM IST


பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில், கானா அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளான.

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கொச்சியில் நடைப்பெற்றது.

ஹோண்டுராஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு பிரேசில் அணிக்கு கிடைத்தது. ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் அந்த அணியின் பிரெனர் ஃபீல்டு கோல் ஒன்றை அடித்தார். 

அதனைத் தொடர்ந்து, 44-வது நிமிடத்தில் அந்த அணியின் அண்டோனியோ ஒரு கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் பிரேசில் 2-0 என முன்னிலைப் பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் பிரேசிலின் கையே ஓங்கியிருந்தது. அந்த அணியின் பிரெனர் மீண்டும் ஒரு கோல் அடிக்க, அந்த அணியின் கோல் எண்ணிக்கை 3 ஆனது.

இறுதி வரை ஹோண்டுராஸ் அணி தனது கோல் கணக்கை தொடங்காததால், பிரேசில் 3-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.

பிரேசில் அணி தனது காலிறுதியில் மாலி அணியை எதிர்கொள்கின்றன.

அதேபோன்று நவி மும்பையில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் ஒன்றில் கானா - நைஜர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதல் பாதி வரையில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சவாலாக விளையாடிய நிலையில், முதல் பாதியில் கூடுதலாக வழங்கப்பட்ட 4 நிமிடத்தில் கானா அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் எரிக் அயியா, தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அருமையான கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில கானா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

பின்னர் தொடங்கிய 2-வது பாதி ஆட்டத்தில் நைஜர் அணி தனது கோல் வாய்ப்புக்காக போராடியது. ஆனால், அதற்கு சற்றும் இடம் அளிக்காத கானா வீரர்கள், நைஜரின் கோல் முயற்சிகளை முறியடித்தனர். 

இந்த நிலையில், ஆட்டம் இறுதிக் கட்டத்தை எட்ட 90-வது நிமிடத்தில் கானா வீரர் ரிச்சர்டு டான்சோ ஃபீல்டு கோல் ஒன்றை அடிக்க, அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கானா அணி தனத் காலிறுதியில் ஜெர்மனி அணியுடன் மோதுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios