பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும், அவரது அலோசகருமான இவான்கா டிரம்ப் பங்கேற்கிறார். 

பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும், அவரது அலோசகருமான இவான்கா டிரம்ப் மற்றும் வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவர் கிம் யோங் சோலும் அதில் கலந்து கொள்கின்றனர்..

ஒலிம்பிக் நிறைவு நிகழ்ச்சியில் உயர்மட்ட அதிகாரிகள் குழுவுடன் இவான்கா டிரம்ப் கலந்துகொள்கிறார் என்று உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், கிம் யோங் சோ தலைமையில் வடகொரியாவின் உயர்மட்ட குழு ஒன்றும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதில் கிம் யோங் சோல் மூன்று நாள்கள் வரையில் தென் கொரியாவில் முகாமிட்டிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் கடந்த சில மாதங்களாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இருதரப்பின் உயர்மட்ட அதிகாரிகள் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.