This is the Indian team that will give Duff to South Africa.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இடம்பிடித்துள்ளார். இதுவரை 28 ஒருநாள் போட்டிகள், 30 டி20 போட்டிகளில் பங்கேற்ற அவர், டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
விக்கெட் கீப்பர் பார்திவ் படேல், ஆல் ரௌண்டர் ஹார்திக் பாண்டியா ஆகியோரும் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளனர். இந்த அணிக்கு 7 பேட்ஸ்மேன்கள், 7 பந்துவீச்சாளர்கள், ஒரு ஆல்ரவுண்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் வரும் ஜனவரி 5-ஆம் தேதி தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி:
விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவன், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரித்திமான் சாஹா, பார்திவ் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் பாண்டியா.
