Theswe players are part of India in Commonwealth Games ......
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் சார்பில் பங்கேற்கவுள்ள 27 துப்பாக்கி சுடுதல் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ள உள்ளது.
ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், இந்தியாவின் சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் மொத்தம் 27 பேர் கலந்து கொள்கின்றனர்.
ஆடவர் பிரிவில், ஜிது ராய், ககன் நரங், சஞ்சீவ் ராஜ்புத், மானவ்ஜித் சிங் சாந்து, முகமது அஸாப் உள்ளிட்டோரும், மகளிர் பிரிவில், ஹீனா சிந்து, மெஹுலி கோஷ், மனு பாக்கர், அபூர்வி சந்தேலா உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய ரைஃபிள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில், இந்தியாவின் சார்பில் மொத்தம் 30 துப்பாக்கி சுடுதல் வீரர்கள் பங்கேற்று 4 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலம் உள்பட 17 பதக்கங்களை அள்ளி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
