There is no limit to the love and support of Tamil people - Sachin
தமிழ் மக்களின் பாசத்திற்கும், அன்புக்கும் அளவே இல்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
புரோ கபடி லீக் சீசன் - 5ன் சென்னை சுற்றுப் போட்டிகள் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றுத் துவங்கியது.
இந்தப் போட்டியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் தலைவாஸ் இணை உரிமையாளர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆகியோர் கலந்து கொண்டு தொடக்கி வைத்தனர்.
முன்னதாக இந்தப் போட்டி குறித்து சச்சின் டெண்டுல்கர், “சொந்த மண்ணில் தமிழ் தலைவாஸின் முதல் போட்டியை காண வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
எப்போது கிரிக்கெட் விளையாட சென்னை வந்தாலும் தமிழ் மக்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் அளவே இல்லை.
தற்போது கபடியை பார்க்க வந்துள்ளேன். தமிழர்களுக்கு கபடி மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
