The tragedy of the archer in the training
சாய் பயிற்சி மையத்தில் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீராங்கனை பாஸிலாவின் (14) கழுத்தில் அம்பு பாய்ந்தது.
வில்வித்தை வீராங்கனைகள் அனைவரும் கொல்கத்தாவில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, சகவீராங்கனை ஒருவர் எய்த அம்பு, எதிர்பாராதவிதமாக பாஸிலாவின் (14) கழுத்தில் பாய்ந்தது. அவருடைய கழுத்துச் சதை வலியாக பாய்ந்த அம்பு, கழுத்து எலும்பில் குத்தியது.
உடனே, பாஸிலா அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக "சாய்' பிராந்திய இயக்குநர் கோய்ந்தி கூறியது:
“பாஸிலா தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும். பயிற்சியில் ஈடுபடுபவர்கள் அவர்கள் எய்த அம்பை மீண்டும் எடுத்து வருவது தொடர்பாக கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அனைத்து நபர்களும் தங்களுடைய அம்பை எடுத்துக்கொண்டு, அம்பு எய்யும் இடத்திற்கு வந்த பிறகுதான் மீண்டும் அம்பை எய்ய வேண்டும்.
அப்படி இருக்கையில் இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
