The state gave the death blow to Delhi

ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தின் மகளிர் பிரிவில் 80 - 66 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லிக்கு மரண அடி கொடுத்து வீழ்த்தியது தமிழகம்.

31-ஆவது தேசிய கூடைப்பந்துப் போட்டிகள், தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகம், அரைஸ் அறக்கட்டளை, கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம் மற்றும் பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை சார்பில் கோவையில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது.

இதில், மகளிர் பிரிவில், தமிழகம் 80 - 66 என டெல்லியையும், தெற்கு ரயில்வே 74 - 57 என தெலங்கானாவையும் வீழ்த்தின.

அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் மகளிர் பிரிவில், தென்னக ரயில்வே 65 - 52 என பஞ்சாப் அணியை சாய்த்தது.

மற்றொரு ஆட்டத்தில், மேற்கு வங்கம் 79 - 50 என டெல்லியைத் வீழ்த்தியது.