The Monaco team won the championship for the first time in 17 years Drowsiness in happiness ...

கடந்த 17 ஆண்டுகளில் முதல்முறையாக பிரெஞ்சு லீக் 1 கால்பந்து போட்டியில் மொனாக்கோ அணி, சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பிரெஞ்சு லீக் 1 கால்பந்து போட்டி மொனாக்கோவில் நடைபெற்றது. இந்த லீக் ஆட்டத்தில் மொனாக்கோ அணி, செயின்ட் எட்டீன் அணியுடன் மோதியது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மொனாக்கோ 2-0 என்ற கோல் கணக்கில் செயின்ட் எட்டீனைத் தோற்கடித்ததன்மூலம் தொடர்ந்து 11-ஆவது வெற்றியைப் பெற்ற மொனாக்கோ அணி, 92 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இதுவரை 37 ஆட்டங்களில் விளையாடியுள்ள மொனாக்கோ அணி, 29 ஆட்டங்களில் வென்றுள்ளது. மொனாக்கோ அணி, கடந்த 17 ஆண்டுகளில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டம் வென்றது குறித்து மொனாக்கோ அணியின் கேப்டன் ரேடாமெல் பால்கோ கூறியது:

'இப்போது நாங்கள் சாம்பியன் என சொல்லிக் கொள்ளலாம். இந்த அணியையும், வீரர்களையும் நினைத்து பெருமை கொள்கிறேன். எனது கனவு நனவாகியிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்' என்றார்.

நாளை நடைபெறவுள்ள ரென்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெல்லும்பட்சத்தில் பிரெஞ்சு லீக் 1 கால்பந்து வரலாற்றில் ஒரு சீசனில் அதிக வெற்றிகளைப் (30) பெற்ற அணி என்ற சாதனையை பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணியுடன் பகிர்ந்துகொள்ளும் மொனாக்கோ.