The Indian womens hockey team who beat Uruguay devastating

மகளிர் உலக வலைகோல் பந்தாட்ட லீக்கின் இரண்டாவது சுற்றில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை துவம்சம் செய்தது.

கனடாவின் வான்கோவர் நகரில் மகளிர் உலக வலைகோல் பந்தாட்ட லீக் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் 6-ஆவது நிமிடத்தில் இந்திய கேப்டன் ராணி கோலடித்தார். இதனால் இந்திய அணி 3-ஆவது கால் ஆட்டம் வரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

அதேசமயத்தில் சரிவிலிருந்து மீள்வதற்கு தொடர்ந்து போராடிய உருகுவே அணி 45-ஆவது நிமிடத்தில் கோலடிக்க, ஸ்கோர் சமனானது.

அடுத்த 4-ஆவது நிமிடத்தில் வந்தனா கேத்ரியா கோலடிக்க, இந்தியா 2-1 என மீண்டும் முன்னிலைப் பெற்றது.

ஆனால், 54-ஆவது நிமிடத்தில் இந்திய பின்கள வீராங்கனைகள் செய்த தவறால் உருகுவே அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதில், அந்த அணி கோலடிக்க, ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் மீண்டும் சமனாகி விறுவிறுப்பை ஏற்படுத்தின.

இதனையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், இந்திய அணி இரண்டு கோல்களைப் போட்டது. உருகுவே அணிக்கு எந்த கோலையும் இந்திய அணி கொடுக்கவில்லை.

இதனால், 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியா அபாரா வெற்றிக் கண்டது.

இந்தியத் தரப்பில் ராணி, மோனிகா, தீபிகா, நவ்ஜோத் கெளர் ஆகியோர் தலா ஒரு கோலடித்து அசத்தினர்.