The Indian team in the final round of the defeat has suffered But silver won ...

ஆசிய மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் சுமித் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆசிய மல்யுத்தப் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

இதில், ஆடவர் 125 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் சுமித் களம் கண்டார். இவர், தனது இறுதிச் சுற்றில் ஈரானின் யடோல்லா முகமதுகாஸிமிடம் மோதினார்.

இந்த மோதலில் 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் யடோல்லாவிடம் பரிதாபமாக தோல்வி கண்டார். இதனால் சுமித்துக்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணி ஒரு தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் நிறைவடைந்தது.