The Government of India plans to test food products for sportspersons
ஊக்கமருந்து பயன்பாடு பிரச்சனைகளை கையாள ஏதுவாக, விளையாட்டு வீரர்களுக்கான உணவுப் பொருள்களை பரிசோதிக்கும் திட்டத்தை ஏற்படுத்த அரசு சிந்தித்து வருகிறது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், தெரிவித்துள்ளார்.
தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கருத்தரங்கு டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது.
இதில், விளையாட்டில் ஊக்கமருந்து பயன்பாடு குறித்து அந்தக் கருத்தரங்கு நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் விஜய் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கை:
“விளையாட்டுத் துறையில் ஊக்கமருந்து பயன்பாட்டை தடுக்கும் வகையில், அதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும்.
ஊக்கமருந்து பயன்பாட்டின் பாதிப்புகள் குறித்து அடிப்படையில் இருந்தே விளையாட்டு வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். இதற்காக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கருத்தரங்கு மற்றும் பிரசாரங்கள் நடத்தப்படலாம்.
ஊக்கமருந்து பயன்பாடு பிரச்சனைகளை கையாள ஏதுவாக, விளையாட்டு வீரர்களுக்கான உணவுப் பொருள்களை பரிசோதிக்கும் திட்டம் ஒன்றை ஏற்படுத்த அரசு சிந்தித்து வருகிறது.
இதன்மூலம், தாங்கள் உட்கொள்ளும் உணவுகள் தடைசெய்யப்பட்ட பொருள்கள் இல்லாதவை என்பதை விளையாட்டு வீரர்கள் உறுதி செய்ய இயலும்.
அத்துடன், அறிவியல்பூர்வமான உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் ஊட்டச்சத்துகளை வீரர்களுக்கு வழங்க வேண்டும்” என்று அதில் விஜய் கோயல் கூறியுள்ளார்.
