The first Test match against England - West Indies today collapses ...

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்குகிறது.

பகலிரவாக நடைபெறும் இந்தப் போட்டி சர்வதேச அளவில் பகலிரவாக நடைபெறவுள்ள 5-வது டெஸ்ட் போட்டியாகும்.

அதேநேரத்தில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுதான்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது.

இந்தப் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படும் என்பது கொசுறு தகவல்.