The first player to win ten titles in Grand Slam tournament was Rafael Nadal

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் 10-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பத்து பட்டங்கள் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நடால் படைத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் மற்றும் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா ஆகியோர் மோதினர்.

இதில், 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் நடால்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 22-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் விளையாடியிருக்கும் நடால் 15-ஆவது பட்டத்தை வென்றிருக்கிறார்.

பிரெஞ்சு ஓபனில் 3-ஆவது முறையாக ஒரு செட்டைக்கூட இழக்காமல் வாகை சூடியிருக்கிறார் நடால். இதற்கு முன்னர் 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் ஒரு செட்டைக்கூட இழக்காமல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

பிரெஞ்சு ஓபனில் மட்டும் இதுவரை 81 ஆட்டங்களில் விளையாடியுள்ள நடால், அதில் 79 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் 2014 அக்டோபருக்குப் பிறகு சர்வதேச தரவரிசையில் மீண்டும் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் நடால்.

வெற்றி குறித்து நடால் பேசியது”

"இது உண்மையிலேயே வியக்கத்தக்க வெற்றி. ஒரே போட்டியில் 10 பட்டங்களை வெல்வது என்பது மிக மிக சிறப்புமிக்கதாகும். எனது மகிழ்ச்சியையும், உணர்வையும் வெளிப்படுத்த முடியவில்லை' என்றுத் தெரிவித்தார்.