The first match of the one-day cricket series in India - May Day rallies today ...

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று தொடங்குகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேற்கிந்தியத் தீவுகள் அணியோடு ஒப்பிடுகையில் இந்திய அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், ஷிகர் தவனுடன் அஜிங்க்ய ரஹானே தொடக்க வீரராக களமிறங்குகிறார்.

மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, யுவராஜ் சிங், தோனி, கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா கூட்டணி பலம் சேர்க்கிறது. கேதார் ஜாதவ், பாண்டியா ஆகியோருக்கு இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாகும்.

வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா கூட்டணியையும் நம்பியுள்ளது இந்தியா.

மேற்கிந்தியத் தீவுகள் அணி, சமீபத்தில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றது. அந்த அணியில் பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் யாரும் இல்லை.

எனவே அந்த அணி தனது சொந்த மண்ணில் பலம் வாய்ந்த இந்திய அணியை எப்படி சமாளிக்கப் போகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தற்போது இடம்பெற்றுள்ள 13 வீரர்களும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 213 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளனர்.

ஆனால், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள யுவராஜ் சிங் மட்டுமே 301 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

இதுவரை இவ்விரு அணிகளும் இதுவரை 116 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் மேற்கிந்தியத் தீவுகள் 60 வெற்றிகளையும், இந்தியா 53 வெற்றிகளையும் பெற்றுள்ளன. ஓர் ஆட்டம் டையில் முடிந்துள்ளது. இரு ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.

இந்தியா அணியின் விவரம்:

ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி (கேப்டன்), யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் விவரம்:

எவின் லீவிஸ், கிரண் பாவெல், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஜொனாதன் கார்ட்டர், ஜேசன் முகமது, ரோஸ்டான் சேஸ், ரோவ்மன் பாவெல், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஆஷ்லே நர்ஸ், அல்ஜாரி ஜோசப், மிக்கேல் கம்மின்ஸ்.