The final round of the T20 World Cup match will take place on this ground.

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்று புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 2020-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்று புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடிலெய்ட், பிரிஸ்பேன், கேன்பெரா, ஜீலாங், ஹோபார்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி ஆகிய 8 நகரங்களில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டி 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரை நடைபெறும். ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டி அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரையும் நடைபெறும்.

மகளிர் போட்டியில் 10 அணிகளும், ஆடவர் போட்டியில் 16 அணிகளும் கலந்துகொள்ள உள்ளன.

இரண்டு பிரிவிலும் இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் யார்ரா பூங்காவில் அமைந்துள்ள விளையாட்டரங்கம். இது உலகின் எட்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம். மேலும் ஆஸ்திரேலியாவின் மிக பெரிய கிரிக்கெட் விளையாடும் மைதானமாக உள்ளது என்பது கொசுறு தகவல்.

இதில், 1 இலட்சத்து 18 பேர் வரை அமரலாம் என்பது கூடுதல் தகவல்.