The Dutch football player Roban has retired from football match ...

சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து நெதர்லாந்து கால்பந்து வீரர் ஆர்ஜென் ராபன் ஓய்வு பெற்றார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அடுத்த வருடம் 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள நெதர்லாந்து அணி தகுதி பெறவில்லை.

இந்த நிலையில் ஆர்ஜென் ராபன் சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.

நெதர்லாந்து அணிக்காக 96 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராபன், 37 கோல்களை அடித்துள்ளார். அவருடைய சிறப்பான ஆட்டத்தால் 2010 உலகக் கோப்பை போட்டியில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய நெதர்லாந்து அணி, அதில் 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது.

2014 உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணி அரையிறுதி வரை முன்னேறுவதற்கு உதவினார் ராபன். 

ராபன் 14 ஆண்டுகள் நெதர்லாந்து அணிக்காக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.