Thanjavur champion in state volleyball tournament for recruiters

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் தஞ்சாவூர் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு, ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நலச் சங்கத்தின் பார்வையற்றோர் அமைப்பு, பார்வையற்றோர் கைப்பந்துக் குழு, விடியல் மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சார்பில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான அமர்வு கைப்பந்துப் போட்டி நடைப்பெற்றன.

ஈரோடு, வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சனி, ஞாயிறு (ஜனவரி 20, 21) ஆகிய தினங்களில் நடைபெற்ற இந்தப் போட்டியை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தொடக்கி வைத்தார்.

இந்தப் போட்டியில் ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சை, தேனி, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை ஆகிய 12 மாவட்டங்களைச் சார்ந்த கைப்பந்து அணிகள் பங்கேற்று விளையாடின.

இதில், முதல் இடத்தை தஞ்சாவூர் மாவட்ட அணியும், 2-ஆம் இடத்தை விழுப்புரம் மாவட்ட அணியும், 3-ஆம் இடத்தை கடலூர் மாவட்ட அணியும் வென்றன.

அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நலச் சங்கத்தின் பார்வையற்றோர் அமைப்புத் தலைவர் முருகன் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் துரைராஜ், ஈரோடு எம்.பி. செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.-க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதல் இடம் பிடித்த தஞ்சாவூர் அணிக்கு கேடயம், பரிசையும், இரண்டாமிடம், மூன்றாமிடம் பிடித்த அணிகளுக்குப் பரிசுகளையும் வழங்கினார்.