Test Series against Spain will be hard - Joury Margin ...
ஸ்பெயின் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் கடுமையாக இருக்கும் என்று இந்திய மகளிர் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் ஜோயர்ட் மார்ஜின் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை மகளில் ஹாக்கி போட்டி வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்டு 5-ஆம் தேதி வரை இலண்டனில் நடைபெறுகிறது.
இதற்கு தயாராகும் வகையில் ஸ்பெயின் அணியுடன் ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் கலந்து கொள்கிறது. இதற்காக இந்திய வீராங்கனைகள் மாட்ரிட் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பயிற்சியாளர் மார்ஜின், "ஆசிய சாம்பயன் கோப்பை போட்டியில் 1-0 என கொரியாவிடம் தோல்வியடைந்தோம். அணியின் தற்காப்பு ஆட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்திய தாக்குதல் ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். எளிதாக கோல்களை விட்டுத் தராத வகையில் தற்காப்பு ஆட்டமுறை மாற்றப்படும்.
ஸ்பெயின் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் கடுமையாக இருக்கும்" என்று மார்ஜின் தெரிவித்தார்.
