ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் ஓய்வு அறிவித்துள்ளார். 

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர். இந்த ஆண்டு நடைபெறும் லேவர் கோப்பை தொடருக்குப் பின் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, ஃப்ரெஞ்சு, விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் என அனைத்துவிதமான கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றவர் ரோஜர் ஃபெடரர். மொத்தமாக 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனைக்கு சொந்தக்காரர் ரோஜர் ஃபெடரர். 

இதையும் படிங்க - அவங்க 2 பேரும் இல்லாத ஒரு உலக கோப்பை டீமா..? இந்திய அணி தேர்வை விளாசிய முன்னாள் வீரர்

41 வயதான ரோஜர் ஃபெடரர் 24 ஆண்டுகளில் 1500க்கும் அதிகமான டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார். அடுத்த வாரம் நடக்கும் லேவர் கோப்பை தொடருடன் ஒய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

Scroll to load tweet…

இதுதொடர்பாக ரோஜர் ஃபெடரர் பதிவிட்டுள்ள டுவீட்டில், கடந்த 3 ஆண்டுகளில் காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் என பல சவால்களை சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ஒருசில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

மேலும் த24 ஆண்டுகால டென்னிஸ் கெரியர் சில நேரங்களில் நினைத்து பார்க்கையில் 24 மணி நேரம் போல தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.