Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தானுடன் மோதப்போகும் கணிக்கப்பட்ட இந்திய அணி!!

ஆசிய கோப்பை தொடரில் இன்று ஹாங்காங்குடன் மோதும் இந்திய அணி, நாளை பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த போட்டிகளில் ஆட வாய்ப்புள்ள இந்திய அணியை பார்ப்போம்.
 

team indias probable eleven players for odi against pakistan in asia cup
Author
UAE, First Published Sep 18, 2018, 2:48 PM IST

ஆசிய கோப்பை தொடரில் இன்று ஹாங்காங்குடன் மோதும் இந்திய அணி, நாளை பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த போட்டிகளில் ஆட வாய்ப்புள்ள இந்திய அணியை பார்ப்போம்.

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகளும் இத்தொடரில் கலந்துகொண்டுள்ளன.

இத்தொடரில் பி பிரிவில் இடம்பெற்றிருந்த இலங்கை அணி, வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வியை தழுவியதால் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய மூன்று அணிகளும் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி, முதல் போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்திவிட்டது. இந்திய அணி இன்று ஹாங்காங்குடன் மோதுகிறது. நாளை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. 

team indias probable eleven players for odi against pakistan in asia cup

கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் மோதியதற்கு பின்னர், ஓராண்டுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதுகின்றன. இந்த தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். ஷிகர் தவான் துணை கேப்டனாக செயல்படுகிறார். 

ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து பார்ப்போம். 

கணிக்கப்பட்ட இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், அம்பாதி ராயுடு, தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ரா, சாஹல்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios