சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தின் தன்மையை அறிந்து, அதற்கேற்றபடி அணியை தேர்வு செய்து, இந்திய அணியை வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து அணி. 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என இழந்தது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசத்தி வெற்றி பெற்றது. தோல்வியிலிருந்து மீண்டெழுந்த இந்திய அணி, நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் தோற்று தொடரை இழந்தது. 

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வியூகம் அந்த அணிக்கு கைகொடுத்தது. சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தின் தன்மையை அறிந்து, முதல் மூன்று போட்டிகளில் ஆடாத மொயின் அலியை இந்த போட்டியில் ஆடவைத்தது இங்கிலாந்து அணி. 

சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் நான்காம் நாள் ஆட்டத்தில் 200 ரன்களுக்கு மேலான இலக்கை விரட்டுவது எளிதல்ல என்றும் இந்த ஆடுகளத்தில் பந்து ஸ்விங் ஆகும் என்பதால், ஆடுகளத்தின் தன்மை மொயின் அலி மற்றும் அடில் ரஷீத்திற்கு உதவும் என கவாஸ்கர் தெரிவித்திருந்தார். அதுதான் நடந்ததும் கூட. 

பார்ட் டைம் ஸ்பின்னரான மொயின் அலி, இந்த போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றியை பறித்தார். இதே சவுத்தாம்ப்டனில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி 266 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியிலும் இங்கிலாந்தின் வெற்றிக்கு மொயின் அலி முக்கிய பங்காற்றினார். அந்த போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார் மொயின் அலி. 

அதேபோல், இந்த போட்டியிலும் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார். அதிலும் இரண்டாவது இன்னிங்ஸில் களத்தில் நிலைத்து நின்று நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி-ரஹானே ஜோடியில் இருவரையுமே அவர் தான் அவுட்டாக்கினார். அதிரடியாக ஆடி இங்கிலாந்து அணியை மெர்சலாக்கிய ரிஷப் பண்ட்டையும் மொயின் அலிதான் வீழ்த்தினார். 

சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தின் தன்மை ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதை அறிந்து, மொயின் அலியை அணியில் எடுத்தது இங்கிலாந்து. அந்த அணியின் நம்பிக்கையை சிதைக்காமல், சிறப்பாக ஆடி வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார் மொயின் அலி.