Asianet News TamilAsianet News Tamil

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் – தமிழ்நாடு 26 தங்கம், 15 வெள்ளி, 26 வெண்கல பதக்கத்துடன் 3ஆவது இடம்!

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் தற்போது வரையில் தமிழ்நாடு 26 தங்கம், 15 வெள்ளி மற்றும் 26 வெண்கலம் என்று மொத்தமாக 67 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Tamilnadu down to 3rd place after 8 days end in Khelo India Youth Games 2024 rsk
Author
First Published Jan 28, 2024, 10:24 AM IST

தமிழகத்தில் 6ஆவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இந்த விளையாட்டு போட்டிகளில் கபடி, ஜூடோ, ஸ்குவாஷ், ஃபென்சிங், பாக்‌ஷிங் (குத்துச்சண்டை), ஜிம்னாஸ்டிக்ஸ், யோகாசனம், ஹாக்கி, மல்லாகம்ப், கட்கா, கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், துப்பாக்கிச் சுடுதல் (ரைபிள், பிஸ்டல்), துப்பாக்கிச்சுடுதல் (ஷாட் ஹன்), வாலிபால், பளுதூக்குதல், கோ கோ, வில்வித்தை, பேட்மிண்டன் என்று பல பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் 8 நாட்கள் முடிவில் தமிழ்நாடு 26 தங்கம், 15 வெள்ளி மற்றும் 26 வெண்கலப் பதக்கம் உள்பட மொத்தமாக 67 பதக்கங்கள் கைப்பற்றி பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 32 தங்கம், 27 வெள்ளி மற்றும் 34 வெண்கலம் என்று மொத்தமாக 93 பதக்கங்கள் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளது. ஹரியானா 26 தங்கம், 15 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் என்று மொத்தமாக 74 பதக்கங்கள் கைப்பற்றி 2ஆவது இடத்தில் உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios