Tamil Nadu won eight gold medals in Commonwealth Games
காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தமிழக வீராங்கனை எட்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இதுவரை இவருக்கு தமிழக அரசு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான காமன்வெல்த் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைப்பெற்றது. இதில், பளு தூக்கும் பிரிவில் இந்தியா சார்பில் தமிழ்நாடு சேலம் மவட்டத்தைச் சேர்ந்த நிவேதா கலந்து கொண்டார்.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற நிவேதா 8 தங்கப் பதங்களை வென்று அசத்தியுள்ளார்.
இதுகுறித்து நிவேதா, “தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் 8 தங்கப் பதக்கங்கள் வென்றிருக்கிறேன்.
தமிழக அரசு இதற்கான அங்கீகாரம் எதையும் அளிக்கவில்லை. அரசு உதவி செய்தால் மேலும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெற்று நாட்டுக்குப் பெருமைச் சேர்ப்பேன்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
