Tamil Nadu India defeated progress to the final round
தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டியில் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய 'ஏ' அணியை வீழ்த்தி தமிழக அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தியோதர் டிராபி கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழக அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ஒட்டங்கள் எடுத்தது.
தமிழக அணியில் தினேஷ் கார்த்திக் 93, ஜெகதீசன் 71 ஒட்டங்கள் எடுத்தனர்.
இந்திய 'ஏ' அணி தரப்பில் ஷ்ரதுல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய இந்திய 'ஏ' அணி 44.4 ஓவர்களில் 230 ஒட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் மன்தீப் சிங் 97 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால், எஞ்சிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட்டானது அந்த அணிக்கு தோல்வியைத் தந்தது. தவிர்க்க
தமிழகம் தரப்பில் ஆர்.எஸ்.ஷா, சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறும் இறுதிச் சுற்றில் தமிழகமும், இந்திய 'பி' அணியும் மோதுகின்றன.
