Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்! லோகோவை வெளியிட்டு, கவுண்ட்டவுனை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ மற்றும் சின்னத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
 

tamil nadu cm mk stalin unveils 44th chess olympiad logo and starts countdown
Author
Chennai, First Published Jun 9, 2022, 10:02 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை இந்த செஸ் போட்டி தொடர் நடக்கவுள்ளது.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். 

இந்த செஸ் போட்டி தொடரை தமிழ்நாட்டில் நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மே 14ம் தேதி தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதையடுத்து இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்த, தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.  இந்த செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஜோதி ஏற்றப்பட்டு நாடு முழுவதும் வலம் வரவுள்ளது. 

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே இந்த செஸ் போட்டித்தொடர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகளில் செஸ்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 

பேருந்துகள், ரயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செஸ் ஒலிம்பியாட் குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வண்ண விளக்குகளால் ஓளிரூட்டப்பட்ட 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ மற்றும் சின்னத்தை அறிமுகம் செய்துவைத்தார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான 50 நாள் கவுண்ட்டவுனையும் தொடங்கிவைத்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios