Syed Mushtaq Ali Tamil Nadu defeat up

சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் உத்தர பிரதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது தமிழக அணி.

சையத் முஷ்டாக் அலி டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. முந்தைய போட்டியில் சதமெடுத்த சுரேஷ் ரெய்னா இன்று 41 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்தார்.

தமிழக அணியின் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

163 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை 19.2 ஓவர்களில் அடைந்தது தமிழக அணி. தொடக்க வீரர்களான பரத் சங்கர் 30 ஓட்டங்கள், வாஷிங்டன் சுந்தர் 33 ஓட்டங்கள், சஞ்சய் யாதவ் 52 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

இதனிடையே 'பி' பிரிவில் பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட் செய்த பரோடா 8 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

இதர ஆட்டங்களில் ராஜஸ்தான் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜார்க்கண்டை வீழ்த்தியது.