பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று நாடு திரும்பிய இந்திய வீரர் ஸ்வப்னில் குசலேவிற்கு புனே விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற 33ஆவது ஒலிம்பிக் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும், 3 நாட்களில் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் முடிவடைகிறது. இதுவரையில் 12 நாட்கள் முடிந்த நிலையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் இந்தியாவிற்கு முதல் முறையாக மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். கடந்த ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் 3ஆவது இடம் பிடித்த மனு பாக்கர் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். இந்த தொடரில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்று கொடுத்த வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்தார்.

ஹாக்கி, மல்யுத்தம், ஈட்டி எறிதலில் பதக்கம் கிடைக்க வாய்ப்பு – நீரஜ் சோப்ரா விளையாடும் போட்டி எப்போது?

Scroll to load tweet…

இதே போன்று இதே பிரிவில் கலப்பு இரட்டையரில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி 3ஆவது இடம் பிடித்து 2ஆவது வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தது. 30ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்தார். கடைசியாக துப்பாக்கி சுடுதல் 50மீ ஏர் ரைபிள் 3 பி பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே 3ஆவது இடம் பிடித்து இந்தியாவிற்கு 3ஆவது வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார். இதைத் தொடர்ந்து மகளிருக்கான மனு பாக்கர் 25மீ பிஸ்டல் பிரிவில் 4ஆவது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

3 ஒலிம்பிக்ஸ், ஒரு பதக்கமும் இல்லை – மல்யுத்தம் ஜெயிக்க, நான் தோற்றேன் - துணிச்சல் இல்லை – வினேஷ் போகத்!

இதையடுத்து இன்று நடைபெறும் மல்யுத்தம், ஹாக்கி மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா பதக்கம் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் 3ஆவது வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலே நாடு திரும்பிய நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. புனே விமான நிலையம் வந்த அவரை காரில் ஊர்வலமாக உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Vinesh Phogat: ஷாக்கிங் நியூஸ்! மல்யுத்தத்திற்கு குட் பை!ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்! ரசிகர்கள் அதிர்ச்சி!

Scroll to load tweet…