Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் வருகிறார் வார்னர்.. 9 வீரர்களை கொத்தாக தூக்கி போட்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2019 ஐபிஎல் சீசனுக்கு தங்களிடம் இருந்த 9 வீரர்களை விடுவித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
 

sunrisers hyderabad released 9 players ahead of 2019 ipl auction
Author
India, First Published Nov 16, 2018, 10:02 AM IST

2019 ஐபிஎல் சீசனுக்கு தங்களிடம் இருந்த 9 வீரர்களை நீக்கியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

ஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. இந்த சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் கோவாவில் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்துக்கொள்ள விரும்பாத வீரர்களின் பட்டியலை வெளியிட்டுவருகின்றன. 

மும்பை இந்தியன்ஸ் அணி 18 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு 10 வீரர்களை நீக்கியது. அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு 9 வீரர்களை விடுவித்துள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையில் இருந்ததால் கடந்த சீசனில் டேவிட் வார்னர் ஆடவில்லை. எனவே அவர் வகித்துவந்த கேப்டன் பொறுப்பு கேன் வில்லியம்சனிடம் வழங்கப்பட்டது. வில்லியம்சனும் சிறப்பாக செயல்பட்டு இறுதி போட்டி வரை அணியை அழைத்து சென்றார். 

sunrisers hyderabad released 9 players ahead of 2019 ipl auction

இந்நிலையில் அடுத்த சீசனுக்குள் வார்னரின் தடை முடிந்துவிடும் என்பதால் அடுத்த சீசனில் வார்னர் ஆடுவார். அதனால் அவரை சன்ரைசர்ஸ் அணி தக்கவைத்துள்ளது. ஆனால் கேப்டன் பொறுப்பு மீண்டும் வார்னருக்கு வழங்கப்பட வாய்ப்பில்லை. அதேநேரத்தில் சன்ரைசர்ஸ் அணி தங்கள் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானை டெல்லி டேர்டெவில்ஸுக்கு வழங்கிவிட்டு அவருக்கு பதிலாக விஜய் சங்கர், நதீம், அபிஷேக் ஆகிய மூவரையும் டெல்லியிடமிருந்து பெற்றுள்ளது. 

காயம் காரணமாக கடந்த சீசனில் சரியாக ஆடமுடியாமல் போன சஹா, வெஸ்ட் இண்டீஸின் பிராத்வெயிட், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரை சன்ரைசர்ஸ் அணி விடுவித்துள்ளது. அதேபோல பிபுல் சர்மா, சையது மெஹதி ஹசன், சச்சின் பே, தன்மே அகர்வால், கிறிஸ் ஜோர்டான் ஆகிய வீரர்களையும் சன்ரைசர்ஸ் அனி விடுவித்துள்ளது. 

sunrisers hyderabad released 9 players ahead of 2019 ipl auction

சன்ரைசர்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

புவனேஷ்வர் குமார், மனீஷ் பாண்டே, யூசுஃப் பதான், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், முகமது நபி, சித்தார்த் கவுல், கலீல் அகமது, ரஷீத் கான், ஷாகிப் அல் ஹாசன், கோசாமி, தீபக் ஹூடா, பாசில் தம்பி, ஸ்டேன்லேக், சந்தீப் ஷர்மா.

சன்ரைசர்ஸ் அணி விடுவித்த வீரர்கள்:

ஷிகர் தவான், ரித்திமான் சஹா, அலெக்ஸ் ஹேல்ஸ், பிராத்வெயிட், கிறிஸ் ஜோர்டான், சையது மெஹதி ஹசன், சச்சின் பே, தன்மே அகர்வால், பிபுல் ஷர்மா. 

மாற்றப்பட்ட வீரர்கள்:

ஷிகர் தவானுக்கு பதிலாக அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், நதீம் ஆகிய மூவரையும் டெல்லியிடமிருந்து பெற்றுள்ளது சன்ரைசர்ஸ் அணி.

Follow Us:
Download App:
  • android
  • ios