எங்களுக்கு இப்போதும் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கோவா எப்.சி. அணியின் பயிற்சியாளர் ஸிகோ தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் புள்ளிகள் பட்டியலில் எங்கள் அணி கடைசியாக இருந்தாலும், நாங்கள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிடவில்லை என்று கோவா எப்.சி. அணியின் பயிற்சியாளர் ஸிகோ தெரிவித்துள்ளார்.

கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய கோவா அணி, இந்த சீசனில் 7 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்திருப்பதோடு, புள்ளிகள் பட்டியலிலும் 4 புள்ளிகளுடன்) கடைசி இடத்திலேயே உள்ளது.

இந்த நிலையில் ஸிகோ, “எங்களுக்கு இப்போதும் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனாலேயே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என நம்புகிறோம். அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு 20 புள்ளிகள் போதுமானது. ஆனால் இப்போது மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளைப் பார்க்கிறபோது, 20 புள்ளிகள் தேவையில்லை என தோன்றுகிறது' என்றார்