விருதுநகர் மாவட்ட சதுரங்கக் கழகம் சார்பில் சிவகாசியில் மாநில அளவிலான ஓப்பன் சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜேஸீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 280 பேர் கலந்து கொண்டனர்.
போட்டியை மாவட்ட சதுரங்கக் கழகச் செயலர் எஸ்.ஆர்.ராஜன் தொடக்கி வைத்தார்.

போட்டியில் திருச்சி குணால் முதல் பரிசும், மதுரை கணேஷ்பாபு இரண்டாமிடமும், மதுரை நந்தகுமார் மூன்றாமிடமும் பெற்றனர். இவர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

போட்டியில் கலந்து கொண்ட 8,10,12,14 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பள்ளி முதல்வர் சித்ராஜெயந்தி பரிசு வழங்கினார்.
மாவட்ட சதுரங்க கழகப் பொருளாளர் வி.சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்றவர்கள்.