Stark resigned from the series against India
ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.
புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் அசத்திய ஸ்டார்க்கின் வலது கால் எழும்பில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
பெங்களூரில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்ட் போட்டியின்போது மிட்செல் ஸ்டார்க்கின் வலது காலில் வலி ஏற்பட்டதை அடுத்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருடைய வலது கால் எழும்புப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக அவர் நாடு திரும்புகிறார்.
ஏற்கெனவே மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகிய நிலையில், இப்போது மிட்செல் ஸ்டார்க்கும் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
