சையது மோடி கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
சையது மோடி கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் சிந்து தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21-7, 21-12 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான லலிதா தாஹியாவை தோற்கடித்தார்.
சிந்து தனது காலிறுதியில் மற்றொரு சகநாட்டவரான வைதேகியை சந்திக்கவுள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-15, 21-16 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான அன்சால் யாதவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
அடுத்த சுற்றில் மலேசியாவின் ஜல்பாட்லியை சந்திக்கிறார் ஸ்ரீகாந்த்.
இவர்கள் இருவரும் பெற்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதால் அடுத்த சுற்று இவர்களது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
