Asianet News TamilAsianet News Tamil

தமிழக வீரர், வீராங்கனைகளை தாக்கிய டெல்லி விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்! 

sports persons-attack
Author
First Published Jan 6, 2017, 8:06 AM IST


தமிழக வீரர், வீராங்கனைகளை தாக்கிய டெல்லி விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்! 

டெல்லியில் தமிழக வீரர் வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற தேசிய கையெறி பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றில், நடுவர்கள் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சத்திஸ்கர் அணிக்கு சாதகமாக சூழ்ச்சி செய்து தமிழக அணிக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதை தமிழக அணியினர் தட்டிக் கேட்டபோது, அணியின் பயற்சியாளருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது திடீரென மைதானத்தில் இருந்த தமிழக வீரர்களையும், வீராங்கனைகளையும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்களே அடித்து உதைத்து தாக்கினர். கையெறி பந்து போட்டியின் தொடக்கம் முதலே தமிழக அணிக்கு எதிராக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட்டதாக தமிழக அணியின் பயிற்சியாளர் ஆசீர் தெரிவித்துள்ளார். 

தலைநகர் டெல்லிக்கு விளையாடுவதற்காக வந்த தாங்கள், தாக்குதலுக்கு உள்ளானது மிகவும் வேதனை தருவதாக தமிழக வீரர், வீராங்கனைகள் குற்றம்சாட்டினர். மேலும் விளையாட்டு ஒருங்கிணைபாளர்களின் உதவியுடன் நடுவர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவது இது முதல்முறை இல்லை என்று கடந்த ஆண்டுகளிலும் இவ்வாறே செயல்பட்டதாக தமிழ்க வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தெரிவித்தனர். 

மேலும் தமிழக வீரர்கள் மட்டும் இல்லாமல் தென் இந்தியாவில் இருந்து சென்ற ஆந்திரா, கர்நாடகா மாநில விளையாட்டு வீரர்கள் விளையாடும்போதும் ஒருதலைப்பட்சமாகவே நடுவர்கள் செயல்படுவதாக தமிழக விளையாட்டு வீரர்கள் கூறினர்.

மேலும் தமிழக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட ஏற்பாடு செய்யவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios