குடிபோதையில் தகாத வார்த்தைகளை பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ"கீஃப்-க்கு உள்ளூர் போட்டிகளில் விளையாட தடையும், அபராதமும் விதித்துள்ளது நியூ சௌத் வேல்ஸ் அணியின் நிர்வாகம்.

நியூ செளத் வேல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ"கீஃப் குடி போதையில் தகாத வார்த்தைகளை பேசியுள்ளார்.

இதனால், கடுப்பான நியூ செளத் வேல்ஸ் அணி நிர்வாகம், “ஸ்டீவ் ஓ"கீஃப்-க்கு இந்தாண்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடையும், ரூ.9.5 இலட்சம் அபாராதமும் விதித்துள்ளது.

இதனால், இந்தியத் தொடரில் கலக்கிய ஸ்டீவ் ஓ"கீஃப், உள்ளூர் கிரிக்கெட்டில் இந்த சீசன் முழுவதும் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஓ"கீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நியூ செளத் வேல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியிலேயே குடி போதையில் தகாத வார்த்தைகளை பேசிவிட்டேன். இதற்கு மன்னிப்பே கிடையாது. எனது தவறுக்கு நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அதோடு நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்கிறேன். உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு எனக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதையும் மனபூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்' என கூறியுள்ளார்.