Southern Railway defeated without scoring a single goal ejioarci put
சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் பொது கணக்காளர் அலுவலக மனமகிழ் மன்ற கிளப் (ஏஜிஓஆர்சி) அணி ஒரு கோல் கூட போடவிடாமல் தெற்கு ரயில்வே அணியை தோற்கடித்தது.
சென்னை லீக் கால்பந்து போட்டி, செயின்ட் ஜோசப் குழுமம் - சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில், நேற்றைய சீனியர் டிவிஷன் லீக் ஆட்டத்தில் பொது கணக்காளர் அலுவலக மனமகிழ் மன்ற கிளப் (ஏஜிஓஆர்சி) அணியும், தெற்கு ரயில்வே அணியும் எதிர்கொண்டன.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய ஏஜிஓஆர்சி அணி 5-0 என்ற கோல் கணக்கில் தெற்கு ரயில்வே அணியைத் துவம்சம் செய்தது.
ஏஜிஓஆர்சி அணி தரப்பில் அருண் சுரேஷ் இரு கோல்களையும், பீனான்ஸ் இரு கோல்களையும், பாட்டீல் விக்ரம் ஒரு கோலையும் அடித்து அசத்தினர்.
அருண் சுரேஷ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இன்று நடைபெறும் சீனியர் டிவிஷன் லீக் ஆட்டத்தில் சென்னை சிட்டி எப்.சி. அணியும், இந்துஸ்தான் ஈகிள்ஸ் அணியும் மோதுகின்றன.
