Asianet News TamilAsianet News Tamil

டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாள் முடிவில் 266 ஓட்டங்கள் எடுத்த தென் ஆப்பிரிக்கா  அசத்தல்...

South Africa get 266 runs at the end of the first day Test cricket
South Africa get 266 runs at the end of the first day Test cricket
Author
First Published Mar 23, 2018, 11:12 AM IST


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 87 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
 
ஆஸ்திரேலியாவின், கேப் டவுனில் நேற்று தொடங்கிய 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. 

தொடக்க ஜோடியில் மார்க்ரம் டக் ஔட்டாக, அடுத்து வந்த ஹஷிம் ஆம்லா 3 பவுண்டரிகள் உள்பட 31 ஓட்டங்கள் சேர்த்து வீழ்ந்தார். 

பின்னர் வந்த டி வில்லியர்ஸ் அரைசதம் கடந்து 10 பவுண்டரிகள் உள்பட 64 ஓட்டங்கள் அடித்தார். டீன் எல்கர் சதம் கடந்தார்.
 
அதைத் தொடர்ந்து வந்த கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 5 ஓட்டங்கள், டெம்பா பவுமா 1 ஓட்டம், டி காக் 3 ஓட்டங்கள், பிலாண்டர் 8 ஓட்டங்கள், கேசவ் மஹராஜ் 3 ஓட்டங்களில் நடையைக் கட்டினர். 

முதல் நாள் முடிவில் எல்கர் 17 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 121 ஓட்டங்கள், ககிசோ ரபாடா 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

ஆஸ்திரேலிய தரப்பில் பேட்ரிக் கம்மின்ஸ் 4, ஹேஸில்வுட் 2, ஸ்டார்க், மார்ஷ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
 
தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் வரிசை சொற்ப ஓட்டங்களில் சரிந்தபோதும், தொடக்க வீரர் டீன் எல்கர் நிலைத்து நின்று சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios