Asianet News TamilAsianet News Tamil

தொடரும் சோகம்.. ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து அந்த அணியை சம்பவம் செய்த தென்னாப்பிரிக்கா!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஒரே ஒரு டி20 போட்டியையும் வென்றுள்ளது. 
 

south africa defeats australia in only one t20 match
Author
Australia, First Published Nov 18, 2018, 10:00 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஒரே ஒரு டி20 போட்டியையும் வென்றுள்ளது. 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் மண்ணை கவ்வியது. சொந்த மண்ணில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை அவர்கள் இடத்தில் வைத்தே செய்திருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என தென்னாப்பிரிக்க அணி வென்றது. இதையடுத்து ஒரே ஒரு டி20 போட்டி நேற்று நடந்தது. மழை காரணமாக போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 10 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களை குவித்தது.

south africa defeats australia in only one t20 match

109 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஃபின்ச், லின், ஸ்டோய்னிஸ், ஷார்ட் என யாருமே சோபிக்கவில்லை. மேக்ஸ்வெல்லை தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேறினர். மேக்ஸ்வெல்லும் பெரிதாக அடிக்கவில்லை. எனினும் 23 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 38 ரன்கள் எடுத்தார். எனினும் அந்த அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. 10 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி வெறும் 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சொந்தம் மண்ணில் ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, ஒரே ஒரு டி20 போட்டியிலும் தோற்றது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios