Soon the name of the Sports Authority of India is changing - Sports Ministerial Action ...
விரைவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயர் மாற்ற்ப்படும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோர் தெரிவித்தார்.
மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், "இந்திய விளையாட்டு ஆணையத்தின் (ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா) பெயர் மாற்றம் செய்யப்படும். ஆணையம் என்ற பெயருக்கு விளையாட்டில் இடமில்லை. விளையாட்டு என்பது சேவையாகும்.
இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு ஒதுக்கப்படும் நிதி விளையாட்டு அல்லாத பணிகளுக்கும் திருப்பி விடப்படுகிறது. இனிமேல் இதுபோன்ற வேலைகளுக்கு வெளிநபர்கள் பயன்படுத்தப்படுவார்கள். விளையாட்டு திறனை வளர்ப்பதில் மட்டுமே இந்திய விளையாட்டு ஆணையம் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்தாண்டு பள்ளிகளில் இளம் வீரர்களை அடையாளம் காணும் திட்டம் செயல்படுத்தப்படும். 8 முதல் 18 வயதிலான சிறந்த வீரர்–வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும், படிப்பு வசதியும் அளிக்கப்படும்.
விளையாட்டு துறை தொழில்முறையில் கையாளப்படும். விளையாட்டு வீரர்களுக்கு குறைந்தபட்சமாக வேலைவாய்ப்பில் வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டுக்கான அளவு கோல் நிர்ணயிக்கப்படும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
