So far only known as Ramya hostess champion now

கோட்டூர்[புரத்தில் மாநில அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் 70 கிலோ, 75 கிலோ மற்றும் 80 கிலோ பிரிவுகளில் பங்கேற்று, தங்க பதக்கம் வென்று சாம்பியனாகி இருக்கிறார் தொகுப்பாளினி ரம்யா.

நாம் அனைவரும் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக ரம்யாவைப் பார்த்திருப்போம். தனக்கென்று ஒரு பாணியில் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு செல்வார்.

தொகுப்பாளினியாக, நடிகையாக மட்டுமே தெரிந்த ரம்யாவுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. உடற்பயிற்சி மீதும், பளு தூக்கும் போட்டியின் மீதும் அதிக ஆர்வம் கொண்ட ரம்யாவின் மற்றொரு பக்கம்.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஐந்தாவது பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றார் ரம்யா. நம்மில் எத்தனை பேருக்கு இந்த செய்தி தெரிந்திருக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக் குறி. அனைவரும் சுச்சியின் டிவிட்டரில் பிசியாக இருந்திருப்போம். அதனால், இந்த செய்தி நம் கண்ணில் பட்டிருக்காது.

அதே ரம்யா, தற்போது மாநில அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கோட்டுர்புரத்தில் சமீபத்தில் நடைபெற்ற இந்த பளு தூக்கும் போட்டியில், எல்லா வயது ஆண்களும். பெண்களும் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்துள்ளனர். இதில் ரம்யா, 70 கிலோ, 75 கிலோ மற்றும் 80 கிலோ பிரிவுகளில் பங்கேற்று, அதில் வென்று தங்கம் பதக்கமும் பெற்றுள்ளார்.

விடாமுயற்சியின் விஷ்வரூப வெற்றிக்கு எடுத்துக்காட்டாக நமக்குமுன், ரம்யா தங்கமகளாக ஜொலிக்கிறார்.