Asianet News TamilAsianet News Tamil

அனைத்து அணிகளை விடவும் ஆஸ்திரேலியா தான் வலுவான அணி!! பாண்டிங் அதிரடி

உலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 
 

smith and warner presense make australia a strong team said ponting
Author
Australia, First Published Feb 11, 2019, 3:46 PM IST

உலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

தற்போதைய சூழலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. இரு அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளன. எனவே இரு அணிகளில் ஒரு அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்று பிரயன் லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். 

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கான கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. முதல் 3 வீரர்களான ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி என வேகப்பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. குல்தீப் யாதவ் சுழலில் மிரட்டுகிறார். இவ்வாறு நல்ல கலவையிலான வலுவான அணியாக இந்திய அணி திகழ்கிறது. இங்கிலாந்து அணியும் வலுவாக உள்ளது. 

smith and warner presense make australia a strong team said ponting

இந்தியாவும் இங்கிலாந்தும் வலுவாக உள்ள அதேநிலையில், 5 முறை உலக கோப்பையை வென்ற சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவி துவண்டு போயுள்ளது. 

ஆஸ்திரேலிய அணிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், இரண்டு முறை உலக கோப்பையை வென்ற கேப்டனும் மூன்றுமுறை உலக கோப்பையை வென்ற அணியில் ஆடியவருமான ரிக்கி பாண்டிங், உலக கோப்பைக்கு ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரிக்கி பாண்டிங் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதே அந்த அணிக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

smith and warner presense make australia a strong team said ponting

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையை தக்கவைக்கும் என பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்த பாண்டிங், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் தற்போதைய சூழலில் வலுவான அணிகளாக திகழ்கின்றன. ஸ்மித் மற்றும் வார்னரின் வருகை ஆஸ்திரேலிய அணியை வலுவாக்கும். அவர்கள் இருவரும் அணியில் இணைந்துவிட்டால், ஆஸ்திரேலிய அணிதான் மற்ற அணிகளை காட்டிலும் வலுவான அணியாக இருக்கும். நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையை தக்கவைக்கும் என்று பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios