இந்தியாவிற்கு ஆப்படிக்க ஆஸ்திரேலியாவின் அதிரடி திட்டம்!! தடையை தகர்த்தெறிந்து வரும் ஸ்மித், வார்னர்

https://static.asianetnews.com/images/authors/a3d865ff-350d-54f1-ae0b-e6327862a3a9.jpg
First Published 8, Nov 2018, 6:07 PM IST
smith and warner may come back to australian team for india series
Highlights

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்துவரும் ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்க தடை விதிக்கப்பட்ட ஸ்மித் மற்றும் வார்னரை மீண்டும் அணியில் சேர்க்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்துவரும் ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்க தடை விதிக்கப்பட்ட ஸ்மித் மற்றும் வார்னரை மீண்டும் அணியில் சேர்க்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. ஸ்மித் மற்றும் வார்னருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகப்பெரிய தண்டனை என பல கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். 

ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இரு முக்கிய வீரர்கள் அணியில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. திடீரென இரு நட்சத்திர வீரர்கள் அணியில் இல்லாததால் அந்த அணி புதிய கேப்டனின் கீழ் திணறிவருகிறது. இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் சொதப்பிவருகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க தொடருக்கு அடுத்து ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியுடன் அந்த அணி மோதுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் இந்திய அணியை எதிர்கொள்வது ஆஸ்திரேலிய அணிக்கு பாதிப்பாக அமையும். எனவே இந்திய தொடருக்கு முன்னதாக ஸ்மித் மற்றும் வார்னரை மீண்டும் அணியில் சேர்க்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பரிசீலித்துவருகிறது.

கிரிக்கெட் வாரிய  அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் கூறும்போது, ''வார்னர், ஸ்மித் மீதான தடையை நீக்க கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. அது பரிசீலிக்கப்படும். வீரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும்” என்று கூறியுள்ளார். இதனால் இந்திய தொடர் தொடங்குவதற்குள் அவர்கள் மீதான தடை விலக்கிக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. 
 

loader