Sindhu Srikanth got ranked in Top 10 in World Championship
பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் இந்தியாவின் பி.வி.சிந்து 4-வத் இடத்தையும், ஸ்ரீகாந்த் 8-வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.
உலக சாம்பியன்ஷிப் போட்டி வரும் 21-ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில், அதில் பங்கேற்கும் வீரர்களுக்கான போட்டித் தரவரிசையை அறிவித்தது பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் குழு.
இந்த அறிவிப்பின்படி, மகளிர் பிரிவில் ஜப்பானின் அகானே யாமாகுசி போட்டித் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து மகளிர் பிரிவில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
உலகின் 16-ஆம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால், போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தோனேஷிய, ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்ற ஸ்ரீகாந்த் 8-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
7-வது இடத்தில் இருமுறை ஒலிம்பிக் சாம்பியனும், ஐந்து முறை உலக சாம்பியனுமான சீனாவின் லின் டான் உள்ளார்.
இந்தியாவின் அஜய் ஜெயராம் 13-வது இடத்திலும், சாய் பிரணீத் 15-வது இடத்திலும் உள்ளனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை 15-வது இடத்தைப் பிடித்துள்ளது.
