ஹாங்காங்கில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டி தொடரின் இறுதி சுற்றில் இந்தியாவின் வெள்ளி மங்கை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீன தைபேயின் டாங் சூ யிங்கும், இந்தியாவின் பிவி சிந்துவும் விளையாடினர்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய சீன தைப்பே வீராங்கனை பி.வி.சிந்துவை இறுதி போட்டியில் 15-21 17-21 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

ஆரம்பம் முதலே கடுமையாக போராடி வந்த சிந்து தோல்வியடைந்தார்.