sindhu and neval Get to the next round



இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தினர்.

இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து மற்றும் உலகின் 20-ஆம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் பார்ன்பவி சோசுவாங்கை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-19 என்ற நேர் செட் கணக்கில் பார்ன்பவியை வெற்றி பெற்றார்.

சிந்து தனது 2-ஆவது சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா நெவால், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானோனை எதிர்கொண்டார்.

அதில், 17-21, 21-18, 21-12 என்ற செட் கணக்கில் ரட்சனோக்கை வீழ்த்தினார் நெவால்.

சாய்னா அடுத்த சுற்றில் தாய்லாந்தின் நிட்சாவ்ன் ஜின்டாபோலை சந்திக்கிறார்.