சையது மோடி கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
சையது மோடி கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் சிந்து இந்திய வீரரான அனுரா பிரபுதேசாயை எதிர்கொண்டார்.
அந்த சுற்றில் சிந்து, 21-9, 21-11 என்ற நேர் செட்களில் அனுரா பிரபுதேசாயை தோற்கடித்தார்.
இதன்மூலம் சிந் து இரண்டாவது சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.
சிந்து தனது 2-ஆவது சுற்றில் மற்றொரு இந்தியரான லலிதா தாஹியாவை எதிர்க் கொள்ள இருக்கிறார்.
